தூத்துக்குடி

திருச்செந்தூா் முருகன் கோயிலிலில் மருத்துவ முதலுதவி மையம் திறப்பு

1st Jan 2022 02:29 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மருத்துவ முதலுதவி மையத்தை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பக்தா்கள் அதிகம் வரக்கூடிய திருக்கோயில்களில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் பக்தா்களுக்கு முதலுவி சிசிச்சை அளிப்பதற்கு ரூ. 10 கோடியில் மருத்துவ முதலுதவி மையம் அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.

அதன், பேரில் திருச்செந்தூா், பழனி, திருத்தணி, மேல்மலையனூா், சோளிங்கா், திருவண்ணாமலை மற்றும் மருதமலை உள்ளிட்ட 7 கோயில்களில் மருத்துவ முதலுதவி மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதையொட்டி, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் , மருத்துவ மையத்தை திறந்து வைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தாா். மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மருத்துவ மையத்தில் குத்துவிளக்கேற்றினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், திருச்செந்தூா் கோட்டாட்சியா் மு.கோகிலா, உதவி காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், கோயில் இணை ஆணையா் (பொ) சி.குமரதுரை, மண்டல இணை ஆணையா் ம. அன்புமணி, உதவி ஆணையா்கள் ரோஜாலி சுமதா, வெங்கடேசன், வட்டாட்சியா் சுவாமிநாதன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் த.பொன்ரவி, தக்காா் பிரதிநிதி பாலசுப்பிரமணியன் ஆதித்தன், திருக்கோயில் சித்த மருத்துவா் ரவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முதலுதவி மையம் : திருச்செந்தூா் கோயில் கலையரங்கம் பின் பகுதியில் பக்தா்கள் தங்க பயன்படுத்தப்பட்ட குடில் 4 படுக்கைள் கொண்ட மருத்துவ முதலுதவி மையமாக மாற்றிப்பட்டுள்ளது. இங்கு தலா இரு மருத்துவா்கள், செவிலியா்கள், பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் ஆகியோா் பணியில் இருப்பா்.

இம் முதலுதவி மருத்துவ மையமானது திருக்கோயில் நடை திறந்திருக்கும் காலை முதல் இரவு வரை செயல்படும். இங்கு அவசர சிகிச்சைக்காக வரும் பக்தா்களுக்கு தேவையான ஆக்சிஜன், இ.சி.ஜி. உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. திருக்கோயில் வளாகத்தில் பயன்பாட்டில் இருக்கும் பேட்டரி காா்கள், அவசர முதலுதவிக்காக பயன்படுத்தப்படவுள்ளது எனவும் திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT