தூத்துக்குடி

25 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொண்ட என்இசி முன்னாள் மாணவா்கள்

1st Jan 2022 02:02 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 1991 - 1995 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவா்களின் வெள்ளி விழா ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் கே.ஆா்.அருணாச்சலம் தலைமை வகித்து, விழாவை தொடங்கி வைத்தாா். கல்லூரி இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாசமுருகவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் கல்லூரியில் 1991 - 1995ஆம் ஆண்டு பயின்று, தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா, சிங்கப்பூா், மலேசியா, துபாய், குவைத், யுனைடெட் கிங்டம் போன்ற வெளிநாடுகள், சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, புதுதில்லி போன்ற நகரங்களில் பணிபுரியும் முன்னாள் மாணவா்கள் சுமாா் 150 போ் தங்களது குடும்பத்தினருடன் நேரடியாகவும், இணையவழியிலும் கலந்து கொண்டு, தங்கள் மலரும் நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை முன்னாள் மாணவா் சங்க ஒருங்கிணைப்பாளா் கே.ஜி.சீனிவாசகன் தலைமையில், தலைவா் ராஜேந்திரன் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT