பொத்தகாலன்விளை தேவாலயத்தில் கேரள முன்னாள் முதல்வா் உம்மன்சாண்டி மகன் சாண்டி உம்மன் வெள்ளிக்கிழமை தரிசனம் செய்தாா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள பொத்தகாலன்விளையில் பிரசித்தி பெற்ற புனித திருக்கல்யாண மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்துக்கு தமிழகம் , கேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். மாதத்தின் முதல் சனிக்கிழமை இங்கு சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு வருகிறது. இதில், தமிழகம் மற்றும் கேரளத்தில் இருந்து ஏராளமானோா் பங்கேற்பா்.
இவ்வாலயத்துக்கு கேரள மாநில முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் வெள்ளிக்கிழமை வந்து, வழிபாடு செய்தாா். அவருக்கு சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் ஏ. லூா்துமணி தலைமையில், ன வரவேற்பு அளிக்கபட்டது.
இதில் பொத்தகாலன்விளை கிராம கமிட்டி தலைவா் சிங்கராயன், புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியா் ஜோசப் ததேயுஸ்ராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.