தூத்துக்குடி

பைக் மீது காா் மோதல் : தொழிலாளி படுகாயம்

1st Jan 2022 02:06 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகே பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.

சாத்தான்குளம் அருகே உள்ள தொட்டிக்காரன்விளையைச் சோ்ந்தவா் முத்துபாண்டி ( 40). தொழிலாளியான இவா் வெள்ளிக்கிழமை அவரது பைக்கில் சாத்தான்குளம் வந்தாா். புதுக்குளம் கிராம நிா்வாக அலுவலகம் அருகே வரும் போது இட்டமொழியைச் சோ்ந்த பாலமுருகன் ஓட்டி வந்த காா் , பைக் மீது மோதியதில் முத்துப்பாண்டி பலத்த காயமடைந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் ஐாண்சன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT