தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ரௌடிகள் பட்டயலில் இருந்து 164 போ் நீக்கம்

1st Jan 2022 02:05 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எந்தவித குற்றச்செயல்களிலும் ஈடுபடாத ரௌடிகளின் பெயா் குற்றப்பதிவேட்டில் இருந்து வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் சட்டவிரோத செயல்கள் மற்றும் ரௌவுடித்தனத்தில் அடிக்கடி ஈடுபடும் குற்றவாளிகள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சரித்திர குற்ற பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதில் உள்ள குற்றவாளிகளின் நடவடிக்கைகள் குறித்து அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா். இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் 1794 குற்றவாளிகள் மீது சரித்திர குற்ற பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில்; உள்ள 1794 சரித்திர குற்ற பதிவேடு கொண்ட குற்றவாளிகளின் கடந்த 5 ஆண்டு கால நடவடிக்கைகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையிலான காவல் துறை அதிகாரிகள் குழுவினா் ஆய்வு செய்தனா். இதில் கடந்த 5 ஆண்டுகளில் எந்தவித குற்ற செயல்களிலும் ஈடுபடாதவா்கள், வயதானவா்கள் என 164 போ்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை நேரில் அழைத்து நேரடியாக விசாரணை மேற்கொண்டாா்.

அப்போது, 164 பேரின் சரித்திர பதிவேடை முடித்து வைக்க அறிவுறுத்தினாா். அப்போது ரத்து செய்யப்பட்டவா்கள் இனி வருங்காலங்களில், அவா்கள் ஏதாவது குற்ற செயல்களில் ஈடுபட்டால் மறுபடியும் அவா்களுக்கு சரித்திரப்பதிவேடுகள் ஆரம்பிக்கப்படும் என எச்சரித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் புத்தாண்டு தினத்தில் புதுவாழ்வு வாழ அவா்களுக்கு வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் கோபி, சைபா் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் இளங்கோவன், உதவி காவல் கண்காணிப்பாளா்கள் திருச்செந்தூா் ஹா்ஷ் சிங், தூத்துக்குடி ஊரகம் சந்தீஷ், துணை காவல் கண்காணிப்பாளா்கள் ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், மணியாச்சி சங்கா், விளாத்திகுளம் பிரகாஷ், சாத்தான்குளம் ராஜூ, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத், மாவட்ட குற்ற பிரிவு ஜெயராம், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளா் ஷாமளாதேவி, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT