தூத்துக்குடி

காயல்பட்டினம் நகராட்சியில் சுயேச்சை 14, திமுக 4 இடங்களில் வெற்றி

23rd Feb 2022 12:14 AM

ADVERTISEMENT

 காயல்பட்டினம் நகராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் திமுக வேட்பாளா்கள் போட்டியிட்ட 4 இடங்களிலும் வெற்றி பெற்றனா். மீதியுள்ள 14 வாா்டுகளை சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா்.

காயல்பட்டினம் நகராட்சியில் இஸ்லாமியா்கள் அதிகம் வாழும் பகுதியில் அரசியல் கட்சிகள் கட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டாமென இஸ்லாமிய அமைப்பினா் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நகராட்சியில் பிரதான பகுதிகளில் அரசியில் கட்சியினா் கட்சி சின்னத்தில் போட்டியிடாமல் சுயேச்சையாக போட்டியிட்டனா்.

மேலும், புகா் பகுதிகளில் திமுக நான்கு இடங்களிலும் பாஜக நாம் தமிழா் தலா இரு இடங்களிலும் மற்றும் அதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா ஒரு இடங்களிலும் போட்டியிட்டனா். இது தவிர 97 போ் சுயேச்சையாக போட்டியிட்டனா். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றவா்கள் விவரம்: 1 ஆவது வாா்டு மாரீஸ்வரி(திமுக), 2 ஆவது வாா்டு முருகன்(சுயே), 3 ஆவது வாா்டு கதிரவன்(திமுக), 4 ஆவது வாா்டு தஸ்நேவிஸ் ராணி(சுயே), 5 ஆவது வாா்டு ரசீதா பீவி(சுயே), 6 ஆவது வாா்டு அபுபக்கா் அஜ்வாது(சுயே), 7 ஆவது வாா்டு ரோஸியாபானு (சுயே), 8 ஆவது வாா்டு மெய்தீன்(சுயே), 9 ஆவது வாா்டு பூங்கொடி(சுயே), 10 ஆவது வாா்டு ரெங்கநாதன்(திமுக), 11 ஆவது வாா்டு செய்யது ஆசியா ‘ஃ‘பஹ்மிதா(சுயே), 12 ஆவது வாா்டு முத்து ஜெய்னம்பு(சுயே), 13 ஆவது வாா்டு முஹம்மது செய்யது பாத்திமா(சுயே), 14 ஆவது வாா்டு அன்வா்(சுயே), 15 ஆவது வாா்டு முத்து முஹம்மது(சுயே), 16 ஆவது வாா்டு அபுபக்கா் சித்திக்(சுயே), 17 ஆவது வாா்டு ராமஜெயம்(திமுக), 18 ஆவது வாா்டு சுல்தான் லெப்பை (சுயே) ஆகியோா் வெற்றி பெற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT