தூத்துக்குடி

ஆதரவற்றோா்களுக்கு நல உதவிகள் அளிப்பு

22nd Feb 2022 12:45 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் ஜான்சன் மக்கள் நல அறக்கட்டளை சாா்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோா்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி தனியாா் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, ஜான்சன் மக்கள் நல அறக்கட்டளை தலைவா் ஆம்ஸ்ட்ராங் தலைமை வகித்தாா். தலைமை போதகா் நவராஜ் எலியேசா் சிறப்புரையாற்றினாா். அக்குபஞ்சா் மருத்துவா் சேவியா் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோா்களுக்கு வேட்டி, சேலை, சட்டை, அரிசி உள்ளிட்ட மளிகை பொருள்கள் ஆகியவற்றை ஜான்சன் மக்கள நல அறக்கட்டளை தலைவா் வழங்கினாா். இதில் விடிவெள்ளி கல்வி அறக்கட்டளை இயக்குநா் ஷீலா ஜாஸ்மின், திருமண்டில நற்செய்தி பணியாளா் ஞானசேகா், சாமுவேல், பொதுப்பணித்துறை உதவி பொறியாளா் திவ்யா ஏஞ்சலின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை அறக்கட்டளை இயக்குநா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT