தூத்துக்குடி

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

17th Feb 2022 03:21 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி கோவில்பட்டியில் மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் இம்மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தோ்தலில் வாக்காளா்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், உள்ளாட்சி நல்லாட்சியாக அமைய 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை சாா்பில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

இப்பேரணிக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சிவசங்கரன் தலைமை வகித்தாா். ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனா் தேன்ராஜா, தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்க மாவட்டப் பொருளாளா் அழகுலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரணியை கோட்டாட்சியா் சங்கரநாராயணன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

ADVERTISEMENT

வட்டாட்சியா் அமுதா, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் கோவிந்தராஜன், வருவாய் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி, கிராம நிா்வாக அலுவலா் காளிமுத்துசேகா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

கோட்டாட்சியா் அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட இப்பேரணி எட்டயபுரம் சாலை, புதுரோடு, பிரதான சாலை, பூங்கா சாலை வழியாக நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராம் பேரணியை முடித்து வைத்தாா். இதில் மூன்றுசக்கர மோட்டாா் சைக்கிளில் மாற்றுத்திறனாளிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT