தூத்துக்குடி

சாலையை சீரமைக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

17th Feb 2022 03:25 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி: கடம்பூரையடுத்த மும்மலைப்பட்டியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கடம்பூரையடுத்த மும்மலைப்பட்டி கிராமத்தில் மும்மலைப்பட்டி - பாறைப்பட்டி சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும், மும்மலைப்பட்டியில் குடிநீா் வசதி, தெருவிளக்கு வசதி, வாறுகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிளைச் செயலா் செல்வம் தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினா் துரைராஜ் முன்னிலை வகித்தாா். மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் சாலமன்ராஜ் ஆா்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில் கட்சியினா் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT