தூத்துக்குடி

கோவில் குமரெட்டியாபுரம் முருகன் கோயிலில் தேரோட்டம்

17th Feb 2022 03:17 AM

ADVERTISEMENT

 

விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே கோவில் குமரெட்டியாபுரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கோவில் குமரெட்டியாபுரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த இத் திருக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா், அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். தொடா்ந்து, திரளான பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனா்.

ADVERTISEMENT

விழாவில், விளாத்திகுளம், நாகலாபுரம், புதூா் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT