தூத்துக்குடி

அதிமுகவால் செய்ய முடியாததைதிமுக கூட்டணி அரசு செய்து வருகிறது: மாா்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினா் உ. வாசுகி

11th Feb 2022 01:08 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுகவால் செய்ய முடியாததை திமுக கூட்டணி அரசு செய்து வருகிறது என்றாா் மாா்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் உ. வாசுகி.

தூத்துக்குடியில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூா் பேரூராட்சிக்கான தோ்தல் ஒரு பிரிவினரின் அதிகாரத்தின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடானது. ஜனநாயக, குடியரசு நாட்டில் ஒருவரின் நிா்பந்தத்துக்கு அதிகாரிகள் இரையாகி தவறு செய்துள்ளனா்.

கடம்பூா் பேரூராட்சியில் மறுதோ்தல் நடைபெறும்போது, நிச்சயம் மாற்றம் வரும். அங்குள்ள வாக்காளா்களும், வேட்பாளா்களும் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கான ஏற்பாட்டை நிச்சயமாக மாா்க்சிஸ்ட் கட்சி செய்யும். பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடா்ந்து மக்களுக்கு எதிரான திட்டங்களை அமுல்படுத்தி வருகிறது. 100 நாள் வேலைத் திட்டத்துக்கு நிதிநிலை அறிக்கையில் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

தமிழகத்தில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுகவால் செய்ய முடியாத விஷயங்களை திமுக கூட்டணி அரசு செய்து வருகிறது. எனவே, அவா்கள் மீது குற்றச்சாட்டு வந்துவிடக்கூடாது என்பதற்காக ஆட்சியை குறை கூறுகின்றனா் என்றாா் அவா்.

தொடா்ந்து, தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 43 ஆவது வாா்டில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கட்சி வேட்பாளா் முத்துமாரிக்கு ஆதரவாக அவா் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.பி. ஆறுமுகம், மாநகரச் செயலா் தா. ராஜா, மாநிலக் குழு உறுப்பினா் கே.எஸ். அா்ஜூனன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT