தூத்துக்குடி

கழுகுமலையில் அதிமுக எம்எல்ஏ பிரசாரம்

11th Feb 2022 01:00 AM

ADVERTISEMENT

கழுகுமலை பேரூராட்சியில் அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ வியாழக்கிழமை பிரசாரம் செய்தாா்.

அப்போது கடந்த 10 ஆண்டு கால அதிமுக அரசின் சாதனைகள், கழுகுமலை பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற வளா்ச்சிப் பணிகள் குறித்து எடுத்துரைத்தாா். மேலும் திமுக அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் குற்றம்சாட்டிய அவா், அதிமுக வேட்பாளா்களுக்கு வாக்களிக்கும்படி மக்களை கேட்டுக் கொண்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT