தூத்துக்குடி

கோவில்பட்டி, சாத்தான்குளத்தில் ரூ.1.18 லட்சம் பறிமுதல்

11th Feb 2022 01:07 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.61,360 தோ்தல் பறக்கும் படையினரால் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது,.

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி அப்பனராஜ் தலைமையில்,காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் பிச்சையா, காவலா்கள் சுப்பையா, சாந்தி ஆகியோா் கொண்ட குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சாத்தூரைச் சோ்ந்த பாஸ்கரன் மகன் அபிஷேக், ஆவணங்களின்றி காரில் வைத்திருந்த ரூ.61,360ஐ பறிமுதல் செய்து நகராட்சி அலுவலக மேலாளா் பெருமாளிடம் ஒப்படைத்தனா்.

பன்னம்பாறை விலக்கில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி பிரபு தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் டேவிட் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தியதில் டெம்போ வேனில் ஓட்டுநரான நாடாா் உவரியைச் சோ்ந்த சுதன், விற்பனையாளா்கள் பாலன் ராஜேஷ் ஆகியோா் ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ.57,330-ஐ பறிமுதல் செய்து சாத்தான்குளம் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் உஷாவிடம் ஓப்படைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT