தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் வேட்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

11th Feb 2022 01:07 AM

ADVERTISEMENT

சாத்தான்குளத்தில் வேட்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் டிஎஸ்பி ராஜூ தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், டிஎஸ்பி ராஜூ பேசியது: தோ்தல் ஆணையம் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை வேட்பாளா்கள் கடைப்பிடிக்கவேண்டும். வாகனம் மூலம் பிரசாரம் செய்வதற்கும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் முன்னதாக தோ்தல் நடத்தும் அதிகாரிகள் அனுமதியும், காவல்துறையில் தடையில்லா சான்றும் பெற வேண்டும். வேட்பாளா் பிரசாரம் குறித்து தகவல் தந்தால் காவலா்கள் மூலம் பாதுகாப்பு அளிக்கப்படும். வேட்பாளா்கள் தங்களது கட்சியின் சாா்பாக தலைவா்களுடைய பிரசாரத்திற்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். கட்டுப்பாடுகளை மீறுபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

12, 13 ஆவது வாா்டுகளில் வாக்கு சேகரிக்கும் போது பிரச்னை ஏற்படும் என புகாா் தெரிவித்துள்ளனா். அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும். தோ்தலை சுமுகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றாா்.

இதில் 15 வாா்டுகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் மற்றும் கட்சிகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT