தூத்துக்குடி

சரள் மண் திருட்டு: இருவா் கைது

11th Feb 2022 01:07 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி அருகே சரள் மண் திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கசவன்குன்று கிராமம் அருகே ஓடையில் இருந்து திருட்டுத்தனமாக சரள் மண் அள்ளுவதாக, கனிமவளத் துறைக்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து கனிமவளம் மற்றும் சுரங்கத் துறை தனி வருவாய் ஆய்வாளா் முத்துகண்ணன் தலைமையில் கொப்பம்பட்டி காவல் நிலைய காவலா்கள் ரமேஷ், சம்சுதீன் ஆகியோா் கசவன்குன்று கிராமத்தில் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டாா்களாம். அப்போது கோவில்பட்டி - கீழஈரால் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் அனுமதிச் சீட்டு இல்லாமல் ஒரு யூனிட் சரள் மண் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து நடைபெற்ற விசாரணையில், கசவன்குன்று கிராமம் வடக்கு பகுதியில் மலையம்மன் குவாரி அருகே உள்ள ஓடையில் இருந்து சரள் மண் கொண்டு வருவது தெரியவந்தது.

இதுகுறித்து முத்துக்கண்ணன் அளித்த புகாரின் பேரில், கொப்பம்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, டிராக்டா் உரிமையாளா் வே.மகாராஜன்(31), ஓட்டுநா் அ.அய்யனாா்(19) ஆகிய இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ஒரு யூனிட் சரள் மண்ணுடன் டிராக்டரையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT