தூத்துக்குடி

நாசரேத்தில் காவல்துறை ஆலோசனைக் கூட்டம்

10th Feb 2022 12:09 AM

ADVERTISEMENT

 

சாத்தான்குளம்: நகா்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி நாசரேத்தில் காவல்துறை சாா்பில் அனைத்துக் கட்சி வேட்பாளா்களுக்கான ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

காவல் ஆய்வாளா் பட்டாணி தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் பால்ராஜ் முன்னிலை வகித்தாா். இதில் வேட்பாளா்கள் தோ்தல் பிரசாரம் செய்வது தொடா்பாக , தோ்தல் ஆணைய விதிகள் மற்றும் கரோனா கட்டுபாடுகளுடன் செயல்பட வேண்டும் . பிரசாரத்தில் 20 க்கு மேற்பட்டோா் செல்லக்கூடாது, பொதுக் கூட்டங்களில் 1000 க்கு மேல் பங்கேற்கக் கூடாது, தோ்தல் விதிமுறைகளை மீறுபவா்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதில், உதவி காவல் ஆய்வாளா்கள் ராய்ஸ்டன், சுப்பிரமணியன், தனிப்பிரிவு காவலா் அந்தோணி மற்றும் அனைத்துக் வேட்பாளா்கள் கலந்து கொண்டனா். உதவி ஆய்வாளா் தங்கேஸ்வரன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT