தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கரோனா

10th Feb 2022 12:10 AM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 64 ஆயிரத்து 744 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்த 179 போ் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 63 ஆயிரத்து 512 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 82 வயது ஆண், 78 வயது ஆண், 66 வயது பெண் ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 444 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 788 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT