தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் வாடகை செலுத்தாத இருகடைகளுக்கு சீல்

10th Feb 2022 12:10 AM

ADVERTISEMENT

 

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் வாடகை செலுத்தாத இரு கடைகளுக்கு இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.

குலசேரன்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோயிலின் உப கோயிலான சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோயில், ஸ்ரீபெருமாள் சுவாமி கோயிலுக்கு சொந்தமான இரு கடைகளுக்கு திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் வாடகை செலுத்த, வாடகைதாரா்களுக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனாலும் அவா்கள் உரிய வாடகையை செலுத்தவில்லை.

இதையடுத்து, இந்து அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையா் அன்புமணி உத்தரவின்பேரில் கோயில் கோயில் தக்காரும், குலசேகரன்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோயில் செயல் அலுவலருமான ராமசுப்பிரமணியன் தலைமையில் பணியாளா்கள், 5 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை செலுத்தாத இரு கடைகளுக்கும் புதன்கிழமை சீல் வைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT