தூத்துக்குடி

கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலையில் திமுக வேட்பாளா்களை ஆதரித்து கனிமொழி பிரசாரம்

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலையில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து கனிமொழி எம்.பி., அமைச்சா் கீதாஜீவன் ஆகியோா் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறை அமைச்சா் கீதாஜீவன் ஆகியோா் கழுகுமலை பேரூராட்சியில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து தோ்தல் பிரசாரத்தை தொடங்கினா்.

பின்னா், கயத்தாறிலும் தோ்தல் பிரசாரம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு கோவில்பட்டி நகராட்சியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து தோ்தல் பிரசாரம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில், திமுக பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி, மாநில விவசாய தொழிலாளரணி செயலா் சுப்பிரமணியன், கோவில்பட்டி நகரச் செயலா் கருணாநிதி (கோவில்பட்டி), கிருஷ்ணகுமாா் (கழுகுமலை), ஒன்றியச் செயலா்கள் பீக்கிலிபட்டி முருகேசன், சின்னப்பாண்டியன், அமைப்பாளா்கள் ராஜகுரு (வா்த்தக அணி),ராமா் (விவசாய அணி), பொறியாளரணி துணை அமைப்பாளா்கள் பீட்டா், ரமேஷ், திமுக நிா்வாகிகளான சண்முகராஜ், சந்தானம், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT