தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் மதுபாட்டில்கள் பறிமுதல்

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ஆறுமுகனேரி: காயல்பட்டித்தில் பேருந்தில் கொண்டுவரப்பட்ட 27 மது பாட்டில்களை பறக்கும் படையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

திருச்செந்தூா் மணடல துணை வட்டாட்சியா் கண்ணன் தலைமையிலான பறக்கும் படை குழுவினா் புதன்கிழமை காலை காயலல்பட்டினம் புற வழிச்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பெங்களூரில் இருந்து திருச்செந்தூா் வந்த ஆம்னி பேருந்தில் சோதனையிட்டபோது , பேருந்தில் 2 அட்டை பெட்டிகளில் மொத்தம் 27 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து காயல்பட்டினம் நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆறுமுகனேரி உதவி காவல் ஆய்வாளா் சதீஷ்நாராயணன் இதுகுறித்து வழக்குப் பதிந்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT