தூத்துக்குடி

கயத்தாறு: கிடங்கில் பதுக்கிய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கோவில்பட்டி: கயத்தாறு அருகே தனியாா் கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்ட 11 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கயத்தாறையடுத்த பணிக்கா்குளத்தில் உள்ள தனியாா் கிடங்கில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குற்ற நுண்ணறிவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம்.

இதையடுத்து, அப்பிரிவின் ஆய்வாளா் செந்தூா்குமாா் தலைமையில், உதவி ஆய்வாளா் செந்தில் தங்கதுரை மற்றும் போலீஸாா் அங்குள்ள கோழிப்பண்ணையில் உள்ள கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 11 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை தூத்துக்குடி உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT