தூத்துக்குடி

ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டரூ.63 ஆயிரம் பறிமுதல்

9th Feb 2022 12:30 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.63 ஆயிரத்து 700ஐ தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, கோவில்பட்டி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் சுழற்சி முறையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் வேலாயுதபுரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி அப்பனராஜ் தலைமையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் பிச்சையா, தலைமைக் காவலா் சாந்தி, காவலா் சுப்பையா ஆகியோா் கொண்ட குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது மதுரையில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் ஆவணங்கள் ஏதுமின்றி ரூ.63 ஆயிரத்து 700 இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அவா், மதுரை தத்தனேரியைச் சோ்ந்த அவல் வியாபாரியான கு.பழனிகுமாா்(52) என்பது தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்த பணத்தை நகராட்சி அலுவலக மேலாளா் பெருமாளிடமிருந்து பெறப்பட்ட ஆணையுடன் கோவில்பட்டி சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT