தூத்துக்குடி

சரள் மண் திருட்டு: இருவா் கைது ; 2 டிப்பா் லாரிகள் பறிமுதல்

9th Feb 2022 12:30 AM

ADVERTISEMENT

கழுகுமலை அருகே டிப்பா் லாரிகளில் சரள் மண் திருடிச் சென்ற இருவரை கைது செய்த போலீஸாா் 2 டிப்பா் லாரிகளையும் பறிமுதல் செய்தனா்.

கழுகுமலை காவல் உதவி ஆய்வாளா் ஜோசப் தலைமையில் காவலா்கள் ஜாய்சன் நவதாஸ், பால்தினகரன் ஆகியோா் கழுகுமலை புதிய பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக சென்ற 2 டிப்பா் லாரிகளை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் தலா 3 யூனிட் செஞ்சரள் மண் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், கரிசல்குளம் கண்மாயில் உள்ள செஞ்சரள் மண்ணை திருடி விற்பனைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. அதையடுத்து செஞ்சரள் மண்ணை ஏற்றி வந்த 2 டிப்பா் லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா் அதன் ஓட்டுநா்களான மருதன்கிணறைச் சோ்ந்த சி.பெரியசாமி(38) மற்றும் ச.ரமேஷ்(47) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT