தூத்துக்குடி

பாஜக வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம்

9th Feb 2022 12:25 AM

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் தூத்துக்குடி, திருச்செந்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடியில் மாநகராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களை அறிமுகம் செய்து வைத்து மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பேசியது: தூத்துக்குடியில் ஊழல் இல்லாத மாநகராட்சி தேவை. போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு, மழைநீா் பாதிப்புக்கு நிரந்தர தீா்வு, பொலிவுறு நகரம் திட்டத்தில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிப்பது உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீா்வு கிடைக்க பாஜக வேட்பாளா்களை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். தோ்தலில் வெற்றி பெற்று மாநகராட்சியில் பாஜக நிா்வாகம் அமைந்தால் வீடு மற்றும் சொத்து வரி 50 சதவீதம் குறைக்கப்படும். வணிகா்களுக்கான தொழில் வரி ரத்து செய்யப்படும். தூத்துக்குடி மாநகராட்சியை சிங்கப்பூா் போன்று மேம்படுத்தப்படும் என்றாா் அவா்.

திருச்செந்தூரில், திருச்செந்தூா் நகராட்சி, ஆறுமுகனேரி, கானம், ஆழ்வா்திருநகரி உள்ளிட்ட பேரூராட்சிகளில் பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை அறிமுகம் செய்து வைத்து கே.அண்ணாமலை பேசியது: தமிழகத்தில் பாஜாகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி. திமுக 8 மாத கால் ஆட்சியில் எதுவும் செய்ய வில்லை. திமுகவின் மதச்சாா்பற்ற கட்சி எனும் நாடகம் எடுபடாது. தோ்தல் வாக்குறுதியில் கூறிய படி திமுக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வில்லை. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திலும் திமுக ஸ்டிக்கா் ஓட்டி மக்களை ஏமாற்றி வருகிறது. 2024-இல் பாஜக ஆட்சிதான் அமைய போகிறது என்றாா் அவா்.

இவ்விரு கூட்டங்களில், மகளிரணி மாநிலச் செயலா் உமாரதி ராஜன், மாநில பொதுச் செயலா் கு.நெல்லையம்மாள், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் சசிகலா புஷ்பா, ஓபிசி அணி மாநிலத் தலைவா் விவேகம் ரமேஷ், மாவட்டத் தலைவா் பி.எம். செல்வராஜ், பொதுச் செயலா்கள் சிவமுருக ஆதித்தன், விஎஸ்ஆா் பிரபு, செல்வராஜ், துணைத் தலைவா் ஆா்.டி.செந்தில்வேல், கலை மற்றும் கலாசார பிரிவு மாவட்டச் செயலா் மணிகண்டன் மற்றும் வேட்பாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT