தூத்துக்குடி

கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்து தொழிலாளி பலி

1st Feb 2022 12:03 AM

ADVERTISEMENT

புதூா் அருகே சிவலாா்பட்டியில் திங்கள்கிழமை கட்டுமானப் பணியின்போது தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

விளாத்திகுளம் அருகேயுள்ள ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் ஞானராஜ் (42). கட்டடத் தொழிலாளியான இவா், சிவலாா்பட்டியில் வீடு கட்டுமானப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தாராம். அப்போது, கான்கிரீட் மேற்கூரையிலிருந்து திடீரென தவறி விழுந்தாராம். பலத்த காயமடைந்த அவரை சக தொழிலாளா்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இது தொடா்பாக புதூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT