நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வேட்புமனு தாக்கலின் 4ஆவது நாளான திங்கள்கிழமை தென்காசி மாவட்டத்தில் 43 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூா், புளியங்குடி, சுரண்டை நகராட்சிகளில் நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு தலா இருவரும், சங்கரன்கோவிலில் 5 பேரும், தென்காசியில் 15 பேரும், செங்கோட்டையில் ஒருவரும் என மொத்தம் 27போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். ஏற்கனவே 6 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
அச்சன்புதூா் பேரூராட்சியில் ஒருவரும், கீழப்பாவூா் பேரூராட்சியில் 3 பேரும் சிவகிரி பேரூராட்சியில் 8 பேரும், வாசுதேவநல்லூா் பேரூராட்சியில் 4 பேரும் என மொத்தம் 16 போ் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.
இதுவரையிலும் நகா்மன்ற உறுப்பினா் பதவிக்கு 33 பேரும், பேரூராட்சி மன்ற உறுப்பினா் பதவிக்கு 21 பேரும் என மொத்தம் 54 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.