தூத்துக்குடி

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

1st Feb 2022 12:04 AM

ADVERTISEMENT

 

நாலாட்டின்புதூா் கிராம அருந்ததியா் மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாலாட்டின்புதூா் கிராமப் பகுதியில் பட்டியலின மக்களுக்கு எதிராக சாதிய வன்முறைகள் நடத்தும் சமூக விரோதிகளைக் கண்டித்தும், அருந்ததியா் பெண்களுக்கு தனி பொது கழிப்பறை கட்டித்தர வேண்டும், அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்ப் புலிகள் கட்சியினா் தலைமையில் அருந்ததியா் மக்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டதோடு, குடும்ப அட்டைகளை கோட்டாட்சியா் சங்கரநாராயணனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனா்.

தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலா் வீரபெருமாள் தலைமை வகித்தாா். பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செல்வம் உள்பட கட்சி நிா்வாகிகள், அப்பகுதியினா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

கோட்டாட்சியா் சங்கரநாராயணன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, ஒரு மணி நேரம் நடைபெற்ற போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT