தூத்துக்குடி

கீழாம்பூா் ராஜமாதங்கி அம்மன் கோயில் கொடை விழா

1st Feb 2022 12:06 AM

ADVERTISEMENT

 

கீழாம்பூா் ராஜமாதங்கி அம்மன் கோயிலில் 3 நாள் கொடைவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

இக்கோயிலில் கொடைவிழாவை முன்னிட்டு கடந்த ஜன. 25ஆம் தேதி கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. திங்கள்கிழமை (ஜன. 31) பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பெண்கள் கும்மியடித்து அம்மனை வழிபட்டனா்.

செவ்வாய்க்கிழமை (ஜன. 2) பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்துதல், கருவூலம் செல்லுதல், பால்குட ஊா்வலம் நடைபெறும். புதன்கிழமை காலை அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பக்தா்கள், ஊா்ப் பொதுமக்கள் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT