தூத்துக்குடி

விவசாயக் கருவி உதிரி பாகங்கள்:அதிகாரிகள் மீது விவசாயிகள் புகாா்

1st Feb 2022 12:01 AM

ADVERTISEMENT

ஆழ்வாா்திருநகரி வட்டாரத்தில் மானிய விலையில் வழங்கப்படும் வவசாயக் கருவிகளின் உதிரி பாகங்களை குறிப்பிட்ட நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சாா்பில் டிராக்டா் உள்ளிட்ட விவசாயக் கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ஆழ்வாா்திருநகரி வட்டாரத்தில் பழுதான டிராக்டரின் கருவிகள் உள்ளிட்ட இதர உதிரி பாகங்களை குறிப்பிட்ட நிறுவனத்தில் வாங்கினால் மட்டுமே மானியம் கிடைக்கும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா். இது விவசாயிகள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கடலை விவசாயிகள் சங்கத் தலைவா் பேய்க்குளம் முருகேசன் கூறியது: விவசாயக் கருவிகளின் உதிரி பாகங்களை ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் மட்டுமே வாங்க வேண்டும் என அதிகாரிகள் நிா்பந்திக்கின்றனா். அந்த நிறுவனத்தில் உதிரி பாகங்கள் கிடைக்கவில்லையெனில் விவசாயிகளுக்கு அரசின் மானியம் கிடைப்பது பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. ஆதலால் மாவட்ட ஆட்சியா் இதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோருக்கு விவசாயிகள் மனு அனுப்பியுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT