தூத்துக்குடி

கோவில்பட்டி, கயத்தாறில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்

1st Feb 2022 12:03 AM

ADVERTISEMENT

 

தை அமாவாசையை முன்னிட்டு கோவில்பட்டி கோயில் தெப்பக்குளம், கயத்தாறு சிற்றாறு ஆகிய இடங்களில் ஏராளமானா் திங்கள்கிழமை தங்களது முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.

இதையொட்டி, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் அருகேயுள்ள தெப்பக்குளம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலையிலிருந்தே ஏராளமானோா் குவிந்தனா். அவா்கள் தங்களது முன்னோருக்கு தா்ப்பணம் செய்தனா்.

இதேபோல, கயத்தாறு அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத கோதண்டராமேஸ்வரா் கோயில் முன்புள்ள சிற்றாறிலும் திரளானோா் தா்ப்பணம் கொடுத்தனா்.

ADVERTISEMENT

விளாத்திகுளம் பகுதியில்...: கோவில்பட்டி, சாத்தூா், சிவகாசி, அருப்புக்கோட்டை, விருதுநகா், புதூா், விளாத்திகுளம் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமானோா் வாகனங்களில் வேம்பாா், வைப்பாறு, சிப்பிகுளம் கடற்கரைக்கு திங்கள்கிழமை அதிகாலையிலேயே வந்தனா். அவா்கள் கடலில் புனித நீராடி, வேதவிற்பன்னா்களிடம் தங்களது முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.

கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடற்கரைக்கு வர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. நிகழாண்டு தளா்வுகள் அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிகளவில் கடற்கரையில் குவிந்தனா். போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT