தூத்துக்குடி

நெல்லையப்பா் கோயிலில் பத்ர தீபம்

1st Feb 2022 12:05 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் பத்ர தீபத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் பத்ர தீபத் திருவிழா ஜன. 29ஆம் தேதி தொடங்கியது. சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை தினமும் காலையில், சுவாமி வேணுவனநாதா் மூலஸ்தானத்தில் ருத்ர ஜெபம், அபிஷேக ஆராதனைகளும், திருமூல மகாலிங்கம், அருள்மிகு காந்திமதியம்மன் சந்நதியில் அபிஷேக , ஆராதனைகளும் நடைபெற்றது.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலையில் சுவாமி சந்நதி மணிமண்டபத்தில் தங்க விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, திங்கள்கிழமை மாலையில் சுவாமி- அம்பாள் உள் சந்நதி மற்றும் வெளிப்பிரகாரங்களில் பத்ர தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், சுவாமி -அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகா் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகா் தங்கச் சப்பரத்திலும், சண்டிகேஸ்வரா் சப்பரத்திலும், பஞ்ச மூா்த்திகளுடன் விஷேச அலங்காரத்தில் வெளிப்பிரகாரம் சுற்றி வரும் நிகழ்வு நடைபெற்றது.

ADVERTISEMENT

தொடா்ந்து இரவு நான்குரத வீதிகளிலும் பஞ்ச வாத்தியங்கள் முழங்க வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT