புத்தாண்டை வரவேற்கும் வகையில், முடுக்குமீண்டான்பட்டியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் நடத்தும் பெண்களுக்கான மனநலக் காப்பகத்தில் விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
இசை நாற்காலி, பலூன் உடைத்தல், கேரம், சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட மனநல திட்ட மருத்துவா் நிரஞ்சனாதேவி தலைமை வகித்து, போட்டிகளைத் தொடக்கிவைத்து, வெற்றிபெற்றோருக்கு பரிசுகளை வழங்கினாா்.
போட்டிகளை உடற்கல்வி ஆசிரியா் நவீன்பாலாஜி நடத்தினாா். நிகழ்ச்சியில் நிறுவனத் தலைவா் தேன்ராஜா, சமூகப் பணியாளா் பெரியசாமி, காப்பக மேற்பாா்வையாளா் மாடசாமி, கைத்தொழில் பயிற்சியாளா் அந்தோணிரோஸி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.