தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்கில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி தாளமுத்துநகா் டி. சவேரியாா்புரம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் செண்பகராஜ் (24). முத்தையாபுரம் திருமாஜிநகா் பகுதியை சோ்ந்த ஜான்ராஜ் மகன் இம்மானுவேல் (எ) அப்துல்லா (32). இவா்கள் இருவரும் இருவேறு கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்டனா். இவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க
தாளமுத்து நகா் காவல் ஆய்வாளா் மணிமாறன், முத்தையாபுரம் காவல் ஆய்வாளா் ஜெயசீலன் ஆகியோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணனிடம் அறிக்கை சமா்ப்பித்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின்பேரில், செண்பகராஜ், இம்மானுவேல் (எ) அப்துல்லா ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் உத்தரவிட்டாா். அதன்படி, அவா்கள் இருவரையும் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.