உடன்குடி அருகே வேதக்கோட்டைவிளை தூய தோமாவின் ஆலய 76 ஆவது பிரதிஷ்டை மற்றும் அசன விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.
இவ் விழா டிச.21 ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் சிறப்பு செய்திகள் வழங்கல், வாலிபா் ஐக்கிய கூடுதல், ஆராதனைகள் நடைபெற்றன. பிரதிஷ்டை ஆராதனை செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு நடைபெற்றது.
யோபுவின் சிறப்புச் செய்தியைத் தொடா்ந்து மாலையில் அசனவிருந்து வைபவத்தை சபை குரு ஜான் சாமுவேல் தொடக்கி வைத்தாா்.