தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 3 மற்றும் 5ஆவது யூனிட்டுகளில் புதன்கிழமை ஏற்பட்ட பழுது காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இந்த யூனிட்டுகள் மூலம் நாள்தோறும் சுமாா் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அனல் மின்நிலையத்தின் 3 ஆவது மற்றும் 5ஆவது யூனிட்டிலும் பழுது ஏற்பட்டது. இதனால், 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இதை சீரமைக்கும் பணியில் அனல் மின்நிலையப் பொறியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். பழுதை சீரமைக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும், வியாழக்கிழமை முற்றிலுமாக சீரமைக்கப்பட்டு அனைத்து யூனிட்டுகளும் இயங்கும் எனவும் அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.