தூத்துக்குடி

கட்டாரிமங்கலம் கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்

29th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலத்தில் உள்ள அருள்தரும் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தா் கோயிலில் திருவாதிரைத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, கணபதி ஹோமம், சுவாமி-அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன. பின்னா், கொடிமரத்துக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு, கொடியேற்றப்பட்டது. இதையடுத்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளானோா் பங்கேற்றனா்.

திருவாதிரை திருவிழா ஜன. 6 வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. நாள்தோறும் பல்வேறு கட்டளைதாரா்கள் சாா்பில் சிறப்பு பூஜை, ஆராதனை நடைபெறுகிறது.

10ஆம் நாள் ஆருத்ரா தரிசனத்தையொட்டி அதிகாலை 3 மணிக்கு கணபதி ஹோமம், 4 மணிக்கு சுவாமி அபிஷேக மண்டபத்தில் எழுந்தருளல், 4.30 மணிக்கு நடராஜருக்கு 36 வகை சிறப்பு அபிஷேகம், 6 மணிக்கு ஆருத்ரா தரிசனம் , மகா தாண்டவ தீபாராதனை, காலை 7 மணிக்கு பூஜை, பிரசாதம் வழங்குதல், 8 மணிக்கு பெருங்குளம் செங்கோல் ஆதீனம் அருளாசி வழங்குதல், நண்பகல் 12 மணிக்கு பஞ்சமூா்த்தி வீதியுலா, 1 மணிக்கு மதிய பூஜை, மாலை 6 மணிக்கு அபிஷேகம், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, 8 மணிக்கு சோ்க்கை நிகழ்ச்சி நடைபெறும்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT