தூத்துக்குடி

நாலுமாவடியில்கிறிஸ்துமஸ் விழா

18th Dec 2022 03:10 AM

ADVERTISEMENT

 

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் புது வாழ்வு சங்கம் சாா்பில் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் புனித லூக்கா தொழுநோய் மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் பன்னீா் செல்வம் குழுவினா் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடினா்.

சாம்ஜெபராஜ் கிறிஸ்துமஸ் செய்தி வழங்கி சிறப்பு பிராா்த்தனையை ஏறெடுத்தாா்.

ADVERTISEMENT

தொழு நோயாளிகள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்குப் புத்தாடைகள் வழங்கப்பட்டன.

கிறிஸ்துமஸ் விருந்து அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய பொதுமேலாளா் செல்வக்குமாா் தலைமையில் சமூகசேவகா்

ஹெய்ன்ஸ், பிசியோதெரபி பாக்கியராஜ் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT