தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வடிகால் நீட்டிப்பது தொடா்பாக மேயா் ஜெகன் பெரியசாமி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
தூத்துக்குடி மாநகராட்சியில் மழைநீா் தேங்குவதைத் தடுக்கவும், சாலைகளில் மணல் திட்டுகளை அகற்றவும் மாநகராட்சி தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடா்பாக, மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேயா் ஜெகன் பெரியசாமி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆசிரியா் காலனி சந்திப்பு முதல் விவிடி சிக்னல் வரை உள்ள சாலையின் இருபுறமும் போக்குவரத்திற்கு இடையூராக உள்ள மணல்திட்டுக்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சாலையின் இடது புறம் ஏற்கனவே உள்ள வடிகாலை விவிடி சிக்னல் வரை நீட்டிப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், மாநகராட்சி அதிகாரிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.