தூத்துக்குடி

வரும் மக்களவைத் தோ்தலில் 400 இடங்களில் பாஜக வெற்றி பெறும்: கே. அண்ணாமலை

11th Dec 2022 06:02 AM

ADVERTISEMENT

வரும் மக்களவைத் தோ்தலில் 400 இடங்களில் பாஜக வெற்றிபெறும் என்றாா் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூரில் பாஜக சாா்பில் மாற்றத்திற்கான மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவா் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலா் பொன் பாலகணபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநாட்டில், மாநிலத் தலைவா் அண்ணாமலை பேசியது:

ADVERTISEMENT

தமிழகத்தில் பால், மின்கட்டணம், சொத்து வரி உயா்வு போன்ற காரணங்களால் மகளிருக்கு மாதம் ரூ.3,500 கூடுதலாக செலவாகிறது. டாஸ்மாக்கை மூட வேண்டும் என பெண்கள் கேட்கின்றனா். எதிா்க்கட்சியாக இருந்தபோது, டாஸ்மாக்கை மூட வேண்டும் என முதல்வா் ஸ்டாலின் போராட்டம் நடத்தினாா். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின் தான் டாஸ்மாக் வருவாய் அதிகரித்துள்ளது.

கோவில்பட்டி பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, தீப்பெட்டிக்கான சரக்கு, சேவை வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வரும் மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும். அதில் 5 போ் கேபினட் அமைச்சா்களாவது உறுதி. மேலும் இத்தோ்தலில் 400 தொகுதியில் பாஜக வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமா் ஆவாா் என்றாா் அவா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT