தூத்துக்குடி

மாற்று திறனாளிகள் தின விழா: நல உதவிகள் வழங்கினாா் எம்பி

11th Dec 2022 06:03 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி தருவையில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் நலத்திட்ட உதவிகளை, மக்களவை உறுப்பினா் கனிமொழி வழங்கினாா்.

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் இவ்விழா, தருவையில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அரங்கில் நடைபெற்றது. தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மாற்றுத் திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள், தையல் இயந்திரங்கள்,

மோட்டாா் வாகனம், அறிதிறன்பேசி, காது கேட்கும் கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை 313 பேருக்கு வழங்கினாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன், மீன்வளம் - மீனவா் நலன் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் சாரு ஸ்ரீ, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சிவசங்கரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT