தூத்துக்குடி

தூத்துக்குடி பொறியியல் கல்லூரியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு

11th Dec 2022 06:03 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி வாகைகுளம் மதா் தெரசா பொறியியல் கல்லூரியில் 30ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் 10 முதல் 17 வயது வரையிலான பள்ளி மாணவா்களிடையே உள்ள அறிவியல் ஆய்வு மனப்பான்மையை வெளிக்கொணரும் வகையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் இந்த மாநாடு நடைபெற்றது.

ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் மாநாட்டைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலப் பொதுச் செயலா் எஸ். சுப்பிரமணி, தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சுகுமாரன் ஆகியோா் பேசினா். மாநிலத் தலைவா் எஸ். தினகரன், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகப் பதிவாளா் ஜி. அண்ணாதுரை ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

ADVERTISEMENT

வரவேற்புக் குழு கௌரவத் தலைவா் சாந்தகுமாரி, தமிழ்நாடு அறிவியல் இயக்க தூத்துக்குடி மாவட்டச் செயலா் பேராசிரியா் செ. சுரேஷ்பாண்டி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மோகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT