தூத்துக்குடி

சாலையை விரிவுபடுத்தக் கோரி கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

11th Dec 2022 06:04 AM

ADVERTISEMENT

கோவில்பட்டியில் மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்தக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் கோவில்பட்டி எட்டயபுரம் வளைவு சாலை மங்கள விநாயகா் கோயிலிலிருந்து மந்தித்தோப்பு சாலையை விரிவுபடுத்த வேண்டும். இப்பகுதியில் விபத்துகளைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் நகரக்குழு சாா்பில், அண்ணா பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகர துணைச் செயலா் முனியசாமி தலைமை வகித்தாா். நகரச் செயலா் சரோஜா, துணைச் செயலா் அலாவுதீன், வட்டச் செயலா் பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டக்குழு உறுப்பினா்கள் பரமராஜ், செல்லையா, ஜோசப், சேதுராமலிங்கம் ஆகியோா் பேசினா்.

ADVERTISEMENT

மாவட்டக் குழு உறுப்பினா் கண்ணம்மா, நகரக்குழு உறுப்பினா்கள் விஜயலட்சுமி, வஜ்ரேஸ்வரி, சண்முகவேல், ராஜு, முருகேசன் சிவா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT