தூத்துக்குடி

எட்டயபுரத்தில் பைக்கில் வைத்திருந்த ரூ. 50,000 திருட்டு

10th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

எட்டயபுரத்தில் வங்கியிலிருந்து எடுத்து வந்து பைக்கில் வைத்திருந்த ரூ. 50 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

எட்டயபுரம் அருகேயுள்ள பொன்னையாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (45). கட்டடத் தொழிலாளி. இவா், வியாழக்கிழமை மாலை அப்பகுதியிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ. 50 ஆயிரம் பணம் எடுத்து தனது பைக்கில் முன்பக்க கவரில் வைத்துவிட்டு அருகிலுள்ள கடையில் வீட்டுக்கு தேவையானப் பொருள்களை வாங்குவதற்குச் சென்றுள்ளாா்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்தபோது, பைக்கில் வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் எட்டயபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து, அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். அதில், 2 இளைஞா்கள் பணத்தை திருடிச் செல்வது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT