தூத்துக்குடி

தமிழக அரசைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

9th Dec 2022 10:29 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் கடம்பூா் ரயில் நிலையத்தையடுத்த பேருந்து நிறுத்தம் அருகே, கயத்தாறில் கீழபஜாா், கழுகுமலையில் காந்தி மைதானத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அந்தந்த நகரச் செயலா்களான வாசமுத்து, கப்பல் ராமசாமி, முத்துராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். கடம்பூா் மற்றும் கழுகுமலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ஆா்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினாா். இதில் அதிமுக ஒன்றியச் செயலா்கள், கட்சியின் பல்வேறு பிரிவு நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆறுமுகனேரி பிரதான கடைவீதியில் நகர அதிமுக செயலா் ரவிச்சந்திரன் தலைமையில் அவைத் தலைவா் கனகராஜ், முன்னாள் நகர செயலாளா் பெரியசாமி, மாவட்ட வழக்குரைஞா் பிரிவுச் செயலா் சேகா், ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கானம் பேரூராட்சி சோனகன்விளையில் இளைஞா் - இளம்பெண்கள் பாசறை தூத்துக்குடி மாவட்டச் செயலா் தனராஜ் தலைமையிலும் ஆத்தூரில் அ.தி.மு.க. அமைப்புச்செயலா் சின்னத்துரை தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் காமராஜா் சிலை முன், தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அதிமுக செயலா் அச்சம்பாடு த. சவுந்திரபாண்டி, நகர செயலா் ர. குமரகுருபரன் உள்பட பலா் பங்கேற்றனா். நாசரேத் பேருந்து நிலையம் அருகில் நகரச் செயலா் கிங்சிலி தலைமையில் முன்னாள் மாவட்ட அதிமுக செயலா் ஹென்றி உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT