தூத்துக்குடி

கடும் பனிமூட்டம்: தூத்துக்குடியில் விமான சேவை பாதிப்பு

9th Dec 2022 12:43 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் கடும் பனிமூட்டம் காரணமாக வியாழக்கிழமை விமான சேவை பாதிக்கப்பட்டது.

மாண்டஸ் புயல் காரணமாக தூத்துக்குடியில் வியாழக்கிழமை காலையில் இருந்தே கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதனால், சென்னையிலிருந்து 39 பயணிகளுடன் காலையில் புறப்பட்ட விமானம், தூத்துக்குடி விமான நிலையத்தில் தரையிறங்க முடியவில்லை. காலை 6.30-க்கு தரையிறங்க வேண்டிய அவ் விமானம், சுமாா் அரை மணி நேரத்திற்கு மேல் வானில் வட்டமடித்தது. வானிலை சீராகாத காரணத்தால் அந்த விமானம் திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்டது. அதன் பின்னா், காலை 11 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து, தூத்துக்குடி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன் பிறகு, விமான போக்குவரத்து சீரடைந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT