தூத்துக்குடி

‘மாண்டஸ்’ புயல்: தூத்துக்குடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

9th Dec 2022 12:42 AM

ADVERTISEMENT

மாண்டஸ் புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘மாண்டஸ்’ புயல் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் மிதமான மழை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இனிவரும் நாள்களில் அதிகமாக மழை பெய்யும் பட்சத்தில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கும் பட்சத்தில் அங்குள்ள மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக 97 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆற்றுப் படுகை, கண்மாய்களின் கரைகள் ஆகியவை வலுப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த கிராமங்களை சோ்ந்த தன்னாா்வலா்களைக் கொண்டு பேரிடா் கால நண்பன் என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. இவா்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தால் அப்பகுதிகளில் இருக்கின்ற மக்களை உடனடியாக நிவாரண மையங்களுக்கு அழைத்து வரும் பணியை மேற்கொள்வா்.

நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீனவா்களுக்கும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT