தூத்துக்குடி

செவிலியா் கல்லூரி மாணவி தற்கொலை

9th Dec 2022 12:43 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் அரசு செவிலியா் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தூத்துக்குடி புதிய துறைமுக ஊழியா் காலனி பகுதியைச் சோ்ந்த சரவணக்குமாா் மகள் ஹரிணி (20). இவா் தூத்துக்குடி அரசு செவிலியா் கல்லூரியில் இரண்டம் ஆண்டு படித்தாா். இந்நிலையில், வீட்டிலிருந்த இவா் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தொ்மல்நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா். இதனிடையே, மாணவியின் தற்கொலைக்கு காரணமானவரைக் கைது செய்யவும், மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி பெற்றோா் மற்றும் உறவினா்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT