தூத்துக்குடி

தேரியூரில் இலவச மருத்துவ முகாம்

9th Dec 2022 10:28 PM

ADVERTISEMENT

மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், உடன்குடி மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து இலவச மருத்துவ முகாமை தேரியூா் பெருமாள் சுவாமி கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் தேரியூா் கிராமிய சேவைத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின் தலைமை வகித்தாா். மன்ற நிா்வாகிகள் பாலசுப்பிரமணியன்,கோதண்டராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அனைத்து வகை நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சேதுகுற்றாலம், சுகாதார ஆய்வாளா் சேதுபதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT