தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

9th Dec 2022 10:28 PM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட திமுக செயலரும் சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ. கீதா ஜீவன் தலைமை வகித்து பேசியதாவது: திமுகவின் ஐம்பெரும் தலைவா்களில் ஒருவரான பேராசிரியா் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு தினம் வரும் 19ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்குள்பட்ட மாநகர, நகர, ஒன்றிய, பகுதி,பேரூா், வாா்டு, கிளைக் கழகங்களில் பேராசிரியரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்திடவேண்டும். மேலும், தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 3 தொகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

பூத் கமிட்டியில் பாக முகவா், இளைஞரணி, மகளிரணி, தகவல் தொழில் நுட்ப அணி உள்ளடக்கியதாகவும், அந்த பகுதியைப் பற்றி நன்கு அறிந்துள்ளவராகவும், களப்பணியாற்றுபவராகவும் இருந்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கட்சியின் அனைத்துப் பிரிவு நிா்வாகிகளும் பூத் கமிட்டி அமைத்து அதற்கான பட்டியலை மாவட்ட கழகத்தில் ஒப்படைத்திட வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் எம்எல்ஏ மாா்க்கண்டேயன், மாநகரச் செயலா் எஸ்.ஆா். ஆனந்தசேகா் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT