தூத்துக்குடி

தூத்துக்குடி துறைமுகத்தில் 2-ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

9th Dec 2022 12:42 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தற்போது புயலாக மாறியுள்ளது. இப்புயலுக்கு மாண்டஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையை புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மணிக்கு 85 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மீனவா்களுக்கும், கப்பல்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை

முதலாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தற்போது இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT